யேசபேல் என்னும் ஸ்திரீயானவள்
கடிந்து கொள்ளுதல்

வெளி. 2:20 “ஆகிலும் உன் பேரில் எனக்குக் குறை உண்டு. என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்”.
நான் இவ்வளவு காலமாய் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சத்தியத்தை நிரூபிப்பதற்கென, 23ம் வசனத்தையும் நீங்கள் படிக்க விரும்புகிறேன்; “அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச்சபைகளும் அறிந்துகொள்ளும்”.
உண்மையாகவே இரண்டு சபைகளுண்டென்றும், ஆவியானவர் இவைகளிரண்டையும் ஒன்றாகக் கருதி அவைகளிடம் பேசுகிறார் என்றும் நான் அநேக முறை கூறியதுண்டு. மேற்கூறிய வசனத்தின் மூலம், சபைகள் உண்டென்றும், கர்த்தர் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து அறிபவர் என்பதைச் சில சபைகள் அறியவில்லையென்றும் நமக்குப் புலனாகிறது. அவர் அத்தகைய தன்மையயுடைவர் என்பதை இச்சபைகளுக்கு நிரூபித்துக் காண்பிக்கப் போகிறார். கள்ளச் சபைகள் இச்சத்தியத்தை அறியாமலிருக்கின்றன. ஆனால் உண்மையான விசுவாசிகளைக் கொண்ட சபையோ, நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் தொடங்குகிறது என்பதை அறிந்து, தேவனுக்கு பயந்து, மற்றவர்கள் தங்களை நியாயந்தீர்க்காதபடிக்குத் தங்களைச் சரிப்படுத்திக் கொள்வார்கள்.
கள்ளச் சபைகளையும் ஏன் தம்முடைய சபைகளாகக் கர்த்தர் அழைக்கிறார்? கள்ளச் சபையைச் சேர்ந்தவர்கள் மாம்சத்தின்படி கிறிஸ்தவர்கள்தான். ஆனால் ஆவிக்குரிய பிரகாரம் அவர்களைக் கிற்ஸ்தவர்களென்று கருத முடியாது. கிறிஸ்துவின் நாமத்தை அவர்கள் வீணாகத் தரித்துக் கொண்டிருக்கிறார்கள். “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்” (மாற்கு 7:7). இருப்பினும், இயேசு தேவனுடைய குமாரன்; அவர் சிலுவையிலறையுண்டு மரித்து, உயிரோடெழுந்தார்; அவரே உலகரட்சகர் என்னும் சத்தியத்தை ஆதிரிக்கும் ஒவ்வொருவனும் கிறிஸ்தவன்தான். அவ்வாறே குரானில் கூறப்பட்டதை ஆதரிப்பவன் முகமதியனாவன். லவோதிக்கேயா சபையின் காலத்தில் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் அநேகர் கிறிஸ்து அருமையான குணாதிசயங்களைப் பெற்றிருக்கிறார் என உரைத்து அதே சமயத்தில் அவருடைய தேவத்துவத்தை மறுப்பார்கள். கிறிஸ்துவ விஞ்ஞானிகள் (Christian scientists) என்றழைக்கப்படும் ஒரு சாராரும் “சமூக சுவிசேஷத்தைப்” (Social Gospel) பிரசங்கித்து வரும் ஆயிரக்கணக் கானவர்களும் இக்காலத்தில் இவ்வாறு செய்து வருகின்றனர்.
மேற்கூறியவர்களைப் “பெயர் கிறிஸ்தவர்கள்” என்றைழக் கலாம் (Nominal Christians). இவர்கள் ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் உண்மையான ஆவிக்குரிய விசுவாசிகளல்ல. உண்மையான விசுவாசியோ கர்த்தருடைய சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்று, அவருடைய சரீரமாயிருக்கிறான். கோதுமை மணியோடு களையும் வளரவேண்டுமென்றும் அவைகள் கடைசி வரை பிடுங்கப்படக் கூடாதென்றும் தேவனுடைய திட்டமும் கட்டளையுமாயிருக்கிறது. களைகளக் கட்டி அக்கினியில் போடப்படும் நாள் இனியும் வரவில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் அது வரப்போகிறது.
ஆவியானவர் இந்த இரண்டு சபைகளோடும் ஒருங்கே பேசுகிறார். உண்மையான சபையை அவர் புகழுகிறார், கள்ளச் சபையையோ கடிந்து கொள்கிறார். சரியான மார்க்கம் எதுவென்று உண்மையான விசுவாசிக்கு அவர் போதித்து விட்டார். தேவனுடைய சமூகத்தில் நீதிமானாயிருக்க வேண்டுமாயின் எவைகளைச் செய்ய வேண்டும் என்பதனையும் கள்ளச் சபைக்குப் போதித்து எச்சரிக்கிறார்.
யேசபேல் என்னும் ஸ்திரியானவள்

பாவத்தின் போக்கை யாக்கோபு அப்போஸ்தலன் நமக்குக் காண்பிக்கிறார். "அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும் போது மரணத்தைப் பிறப்பிக்கும்” (யாக் 1:14-15). சபையின் காலங் களில் நடந்த சம்பவங்களை மேற்கூறிய வசனம் தெளிவாக எடுத்துக் காண்பிக்கிறது. ஆதியில் பாவம் எவ்வாறு ஒரு சிறு உணர்ச்சியாக (feeling) (ஏவாளுடைய) இருதயத்தில் தோன்றியதோ, அதே போன்று சபையின் மரணம், நிக்கொலாய் மதஸ்தரின் சாதாரண கிரியைகளோடு தொடங்கியது. இந்தக் கிரியைகள் வளர்ந்து போதகமாக (doctrine) மாறின. பிறகு இது அரசாங்க அதிகாரம் பெற்று, அதன் மூலம் அஞ்ஞான வழிபாடு சபையில் நிறுவப்பட்டது. தியத்தரா சபையின் காலத்திலும் இந்தக் கொள்கைகள் தீர்க்க தரிசினியினால் போதிக்கப்பட்டது. இவ்வாறு இவைகள் ஒவ்வொரு சபையின் காலத்திலும் பரவி, கடைசியில் இரண்டாம் மரணமாகிய அக்கினிக் கடலில் முடிவடையும்.
இந்த நான்காவது சபையின் காலம் முழுவதும் கர்த்தர் யேசபேல் தீர்க்கதரிசினியைக் கடிந்து கொள்ளுகிறார். வேதத்தின் சரித்திரத்தின் வாயிலாக, யேசபேலின் செய்கைகளின் தன்மையை நாம் அறிவோமானால், இச்சபையின் காலத்தில் நடந்த சம்பவங் களின் தன்மைகளையும் நாம் அறியலாம்.
யேசபேல் என்பவள் ஆபிரகாமின் குமாரத்தியல்ல என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மோவாபிய குடும்பத்தைச் சேர்ந்த ரூத் (Ruth), ஆவிக்குரிய பிரகாரம் இஸ்ரவேல் கோத்திரங்களில் சேர்த்துக் கொள்ளப்பட்டது போல் யேசபேல் சேர்த்துக் கொள்ளப்படவில்ல. இவள் அஸ்தரோத்தின் (Astarte) ஆசாரியனும், சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தியாவாள் (1 ராஜா, 16:31). இவள் தகப்பன், தனக்கு முன் அரசாண்ட பீலிஸ் (Pheles) என்பவனைக் கொன்று சிங்காசனத்தைக் கைப்பற்றினான். அப்படியெனில் யேசபேல் ஒரு கொலைகாரனின் மகள். (இது நமக்குக் காயீனை நினைப்பூட்டுகிறது). இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களுக்கு அரசனாயிருந்த ஆகாபை மணந்து கொண்டதன் காரணமாக இவள் இஸ்ரவேலின் ஒரு பாக மானாளேயன்றி, இஸ்ரவேல் கோத்திரத்தில் சேர்க்கப்படுவதற்கென்று தேவன் நியமித்த பிரமாணத்தைக் கடைபிடித்து அவள் இஸ்ரவேலைச் சேரவில்லை. ஆகையால் இந்தச் சேர்க்கை ஆவிக்குரியதல்ல, அது அரசியல் சம்பந்தப்பட்டது. விக்கிரகாராதனையிலே அமிழ்ந்து கிடந்த இவளுக்கு உண்மையான ஒரே தேவனை வழிபட வேண்டுமென்ற எண்ணம் சிறிதேனும் இல்லை. அதற்கு மாறாக இஸ்ரவேலை உண்மையான தேவனிடத்திலிருந்து திருப்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இவள் இஸ்ரவேல் கோத்திரத்தில் நுழைந்தாள். இஸ்ரவேல் ஜனங்களும் ஏற்கனவே பொன்னால் செய்யப்பட்ட கன்றுக்குட்டியை வணங்கிய அனுபவம் பெற்றிருந்தனர். இருப்பினும் இவர்கள் முழுவதும் தங்களை விக்கிர காராதனைக்கு ஒப்புக் கொடுக்காமல், மோசேயின் நியாயப்பிர மாணத்தைக் கைக்கொண்டு, ஒரே தேவனை வழிபட்டு வந்தனர். யேசபேல் ஆகாபை மணந்த நாள் முதற்கொண்டு, விக்கிரகாராதனை பயங்கரமாக இஸ்ரவேலில் தலையெடுக்கத் தொடங்கியது. யேசபேல் அஸ்தரோத்துக்கும் (வீனஸ்), பாகாலுக்கும் (சூரிய தேவன்) ஆலயங்களைக் கட்டி இத்தேவர்களுக்கு ஆசாரியப் பணியை ஏற்றுக் கொண்டபோது, இஸ்ரவேல் ஜனங்களின் ஜீவியத்தில் ஒரு பெருத்த மாறுதல் ஏற்படும் காலம் வந்தது.
மேற்கூறிய சரித்திர சம்பவத்தை நாம் மனதிற்கொண்ட வர்களாய், தேவ ஆவியானவா தியத்தீரா சபையின் காலத்தில் எதை விவரிக்கிறார் என்று கவனிப்போம்.
ஆகாப் ராஜா, தன்னுடைய ராஜ்யம் பலப்பட்டு பாதுகாக் கப்பட வேண்டும் என்று கருதி, அரசியல் சாமர்த்தியத்தோடு, யேசபேலை மணந்தான். சபையும் கான்ஸ்டன்டைன் ராஜாவை மனந்து அவனுடைய ஆதிக்கத்தில் வந்தபோது, பலப்பட்டு பாது காக்கப்பட்டது. இவ்விருவரும் அரசியல் காரணங்கொண்டு இவ்வாறு செய்து, ஆவிக்குரிய வளர்ச்சிக்கென்று இவ்வாறு செய்ததாக புறம்பே காண்பித்தனர். கான்ஸ்டன்டைன் உண்மையான கிறிஸ்தவனல்ல. அவன் அஞ்ஞானியாயிருந்து, கிறிஸ்தவர்களுக்குரியதாய் தோன்றும் செய்கைகளில் ஈடுபட்டான். இராணுவ சிப்பாய்களின் கேடகத்தில் இவன் வெள்ளைச் சிலுவையை வர்ணம் பூசினான்; கொலம்பஸ் வீரர்களின் குழுவைத் (Knights of Columbus) தொடங்கி வைத்தான். பரி. சோபியாவின் (St. Sophia) ஆலயத்தின் உச்சியில் சிலுவையை நாட்டி அதன் மூலம் ஒரு பாரம்பரிய வழக்கத்தை உண்டு பண்ணினான்.
அஞ்ஞானிகளையும், பெயர்க் கிறிஸ்தவர்களையும், உண்மையான கிறிஸ்தவர்களையும் ஒன்றுபடுத்த கான்ஸ்டன்டைன் எண்ணினான். இந்த ஒன்றுபடுத்துதலின் மூலம் வசனத்தை விட்டுப் போனவர்களை மறுபடியும் சத்தியத்திற்குள் கொண்டு வர இது ஒரு தருணம் என்று எண்ணி விசுவாசிகள் இந்த ஐக்கியத்தில் சேர முடிவு கொண்ட போது, கான்ஸ்டன்டைனின் எண்ணம் வெற்றி பெறும் என்று தோன்றியது. விசுவாசிகள் அவர்களுடைய முயற்சிகளில் தோல்வி கண்டதும் இந்த அரசியல் குழுவினின்று பிரிய நேர்ந்தது. அவ்வாறு பிரிந்தபோது, அவர்கள் துரோகிகள் என்று கருதப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர்.
இக்காலத்தும் இதே சம்பவம்தான் நிகழ்கிறது என்று நாம் கூறமுடியும். எல்லா மக்களும் தற்பொழுது ஒன்றுகூடுகின்றனர். யூதருக்கும். கத்தோலிக்கருக்கரும், பிராடெஸ்டெண்டுகளுக்கும் ஒரு பொதுவான வேதப்புத்தகம் எழுதப்படுகிறது. இக்கூட்டத்தாருக்கு ஒரு நிசியா மகாநாடு (Nicera Council) உண்டு. ஆனால் அதை உலக சபைகளின் மகாநாடு (Ecumenical Council) என்று அழைக்கின்றனர். அந்தக் கூட்டுறவு உண்மையான பெந்தெகொஸ்தரை எதிர்க்கின்றது. பெந்தெகொஸ்தே என்று கூறும்போது, அப்பெயர் கொண்ட ஸ்தாபனத்தை நான் குறிப்பிடாமல் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு சத்தியத்திலே நடப்பதினால் அடையாளங்களையும் அற்புதங்களையும் கொண்டவர்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.
அரசியல் காரணங்களினால் ஆகாப் யேசபேலை மணந்த பிறகு, அஸ்தரோத்துக்கும் பாகாலுக்கும் இரண்டு பெரிய ஆலயங்களைக் கட்டுவதற்கென, அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து பணத்தை எடுக்க, ஆகாப் யேசபேலுக்குச் சம்மதம் கொடுத்தான். பாகாலுக்கென்று கட்டப்பட்ட ஆலயம், இஸ்ரவேல் ஜனங்களெல்லாரும் ஒன்றுகூடி வழிபடத்தக்க அளவுக்கு அவ்வளவு விஸ்தீரணமுள்ளதாய் இருந்தது, அதைப் போன்று கான்ஸ்டன்டைனும் சபையை மணந்து கொண்ட பிறகு, பெரிய ஆலயங்களைக் கட்டி பீடங்களையும் சுரூபங்களையும் உண்டாக்கி, பரம்பரை ஆசாரியர்களை (hierarchy) ஏற்படுத்தினான்.
அரசாங்க அதிகாரத்தைப் பெற்ற போது யேசபேல் தன்னுடைய மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்று எல்லாரையும் வற்புறுத்தி, தேவனுடைய தீர்க்கதரிசிகளையும் ஆசாரியர்களையும் கொலை செய்தாள். இவளுடைய பயங்கரமான செய்கைகளைக் கண்டு, அந்தக் காலத்துத் தூதனான எலியா தீர்க்கதரிசி, தான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருப்பதாக எண்ணினான். ஆனால் கர்த்தரோ பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத 7000 பேரை மீதியாக வைத்திருந்தார். இப்பொழுதும், பாப்டிஸ்ட், மெதோடிஸ்ட், பிரஸ்பிடேரியன் போன்ற அநேக ஸ்தாபனங்களிலுள்ள சிலர் அவைகளை விட்டு வெளியே வந்து தேவனிடத்தில் சேருவார்கள். நான் இப்பொழுதும், எப்பொழுதும் மக்களை விரோதித்ததில்லை. ஆனால் ஸ்தாபனங்களுக்கும் அவைகளை நடத்தும் முறைக்கும் விரோதமாய் நான் இருக்கிறேன். தேவன் அவைகளை வெறுப்பதால் நானும் அவைகளுக்கு விரோதமாக இருக்க வேண்டும்.
தியத்தீராவின் மக்கள் அப்பொல்லோவையும் சக்கரவர்த் தியையும் வணங்கி வந்தனர் என்று நான் முன்னமே கூறினேன். அப்பொல்லொ "பொல்லாங்கைத் தடுப்பவன்" என்று அழைக்கப்பட்டான். பொல்லாங்கை மக்களிடமிருந்து நீக்கி, அவர்களை ஆசீர்வதித்து. அவர்களின் தேவனாக அவன் இருந்தான். முக்காலியில் மெய்மறந்து உட்கார்ந்திருந்த யேசபேல் தீர்க்கதரிசினியின் மூலமாய் மக்களுக்கு வழிபாடு, ஆலயச் சடங்குகள், தேவர்களை சேவிக்கும் விதம், பலி செலுத்துதல், மரணம், மரணத்திற் கப்பாலுள்ள வாழ்க்கை இவைகளைக் குறித்துப் போதித்தான். அவளுடைய போதனையினிமித்தம் தேவனுடைய ஊழியக்காரர் வழிதப்பி, ஆவிக்குரிய விபச்சாரம் செய்ய நேர்ந்தது. விக்கிர காராதனை செய்தல் ஆவிக்குரிய விபச்சாரமே. அது பிரமாணத்திற்கு விரோதமான ஐக்கியமாகும் (illegal union), ஆகாயும் கான்ஸ்டன்டைனும் தங்களுடைய ஐக்கியத்தின் மூலமாக ஆவிக்குரிய விபச்சாரம் செய்தனர். ஒவ்வொரு விபச்சாரக்காரனும் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான் என்று கர்த்தர் உரைத்தார்.
கத்தோலிக்க சபையின் போதனையும் தேவனுடைய வார்த்தையைப் புறக்கணிக்கிறது. (சபை ஸ்திரீயாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது). நவீன அப்பொல்லோவாகிய போப்பும் தம்முடைய போதனையினால், மக்களை விக்கிரகாராதனைக்குட்படுத்தியிருக்கிறார். மக்களுக்கு தேவனுடைய வசனத்தைப் போதிப்பதற்குப் பதிலாக ரோமன் சபை பாவ மன்னிப்பைப் பெறுவதற்கும், தேவனுடைய ஆசீர்வாதங்களையடைவதற்கென்றும் தன்னுடைய சொந்த எண்ணங்களைக் கற்றுக் கொடுத்திருப்பதால், அவள் கள்ளத்தீர்க்கதரிசினியாக விளங்குகிறாள். அவளின் குருமார்கள் இம்மையின் மேலும் மறுமையின் மேலும் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். தேவனுடைய வசனம் போதிக்காத பாவ விமோசன ஸ்தானத்தைக் குறித்து (purgatory) இவர்கள் போதிக்கின்றனர். அது மட்டுமன்றி ஜெபங்களும், ஆராதனை களும், பணமும் ஒரு மனிதனை மேற்கூறிய ஸ்தலத்திலிருந்து விடுதலையாக்கிப் பரலோகத்திற்கு கொண்டு செல்லும் என்று கற்பிக்கின்றனர். இந்தப் போதனைகளை ஆதாரமாகக் கொண்ட இது முழுவதும் தவறான மார்க்கமாகும். கர்த்தர் தமது வசனத்தை வெளிப்படுத்திக் கொடுத்தலின் அஸ்திபாரத்தின் மேல் இது அமையாமல், ஸ்திரமில்லாததும் அமிழ்ந்து போகக்கூடியதுமான தங்களுடைய பொய்யான போதகங்களாகிய மணலின் மேல் இது கட்டப்பட்டதாயிருக்கிறது.
தேவன் தம்முடைய வார்த்தையின் மூலமாய் தம்மை வெளிப்படுத்துகிறார் என்னும் சத்தியத்தை ரோமன் கத்தோலிக்க சபை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களோ தேவன் சபையின் மூலமாய் தம்மை வெளிப்படுத்துகிறார் என்று கூறுகின்றனர். அப்படியெனில் வேதம் முழுவதும் ரோமன் கத்தோலிக்க சபை யின் சரித்திரமாக இருக்க வேண்டும். ஆனால் அது அவ்வாறில்லை. தண்ணீர் ஞானஸ்நானத்தை அவர்கள் எவ்விதம் மாற்றிப் போட்டார்கள் என்று பாருங்கள். அது கிறிஸ்தவ ஞானஸ்நானமாயிருப்பதை நிராகரித்து, பட்டங்களைக் கொண்ட அஞ்ஞான ஞானஸ்நானமாக மாற்றினர். ஒரு கத்தோலிக்கப் போதகனோடு எனக்குண்டாயிருந்த அனுபவத்தை இங்கு கூற விரும்புகிறேன். நான் ஞானஸ்நானம் கொடுத்த ஒரு பெண் கத்தோலிக்க மார்க் கத்தை தழுவினவள். அவளைப் பற்றி அதிகம் அறிய வேண்டுமென்று இந்தப் போதகர் என்னைச் சந்தித்தார், அவள் எந்த ஞானஸ்நானம் எடுத்தாள் என்று அவர் என்னைக் கேட்டபோது, வேதத்தில் சொல்லப்பட்ட ஒரே ஞானஸ்நானமான கிறிஸ்தவ ஞானஸ்நானத்தைக் கொடுத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவளைத் தண்ணீரில் அடக்கம் செய்தேன் என்று நான் கூறினேன். கத்தோலிக்க சபையும் இவ்வித ஞானஸ்நானத்தை ஒருக்காலத்தில் கொடுத்து வந்தது என்று அந்தப் போதகர் என்னிடம் கூற, நான் வியப்புற்று, கத்தோலிக்க சபையின் சரித்திரங்களில் இதைக் குறித்து எங்கும் சொல்லப்படவில்லையென்றும், எப்போது அந்த விதமான ஞானஸ்நானத்தை இந்தச் சபை கொடுத்தது என்றும் வினவினேன். அதற்கு அவர் அதைக் குறித்து வேதப்புத்தகத்தில் எழுதியிருக்கிறதென்றும், பேதுரு கத்தோலிக்க சபையைத்தான் ஸ்தாபித்தார் என்றும், பேதுரு கத்தோலிக்க சபையின் முதல் போப்பாக பணியாற்றினார் என்று அவர் நினைப்பதாகவும் கூறினார். நான் பின்னும் அவரை நோக்கி, ஆராதனைகளின் (Mass) ஒழுங்குகள் மாறக்கூடாது என்ற காரணத்தினால்தான் அவைகள் லத்தீன் (Latin) மொழியில் சொல்லப்படுகின்றனவா என்று கேட்டதற்கு, அவர் ஆம் என்று பதிலுரைத்தார். ரோமன் சபையானது ஆதிக்கால சபையை விட எவ்வளவோ மாறுபட்டது என்று நான் கூறினேன். கத்தோலிக்க சபை உண்மையாகவே அப்போஸ்தலருடைய நடபடிகளில் விக வாசம் வைத்து அதன்படி நடந்தால், நானும் பழைய கத்தோலீக்கன்தான் என்று கூறினேன். வேதம் கத்தோலிக்க சபையின் ஆகமங்களைக் (record) கொண்டது என்றும் தேவன் சபையிலிருக்கிறார் என்றும் அவர் சொன்னபோது, அதற்கு இணங்காமல் தேவன் தம்முடைய வார்த்தையிலிருக்கிறார் என்று நான் கூறினேன். “தேவனே சத்தியபார் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமா”, இந்தப் புஸ்தகத்தில் உள்ளவைகளில் ஒருவன் எதையாவது கூட்டினால் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன் மேல் கூட்டுவார். இந்தப் புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால் ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப் போடுவார் (வெளி 22:13-19).
22ம் போப் ஜான் எழுதிய குறிப்புப் புத்தகத்திலிருந்து (diary). தேவன் தம்முடைய சபையிலிருக்கிறார் என்று ரோமன் கத்தோலிக்க சபை விசுவாசிக்கிறதென்பதை அறியலாம். அவர் போப்பாக வேண்டும் என்ற தேவனுடைய சித்தம் உக்கிராணக்காரர் கொண்ட சபையின் மூலமாய் (Sacred Collegs of Cardinals) அவருக்கு அறிவிக்கப்பட்டதென்றும். அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து. இக்காலத்தையும், எதிர்காலத்தையும் குறித்து யாதொரு கவலையுமின்றி, அமைதியோடு அவர் மேல் விசுவாசம் வைத்து இந்த ஊழியத்தைப் பயத்தோடும் நடுக்கத்தோடும் ஏற்றுக் கொண்ட தாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தேவன் தம்முடைய சித்தத்தைக் சபையின் மூலம் வெளிப்படுத்தினார் என்று போப்பு கூறியிருப்பது மிகவும் தவறாகும். தேவன் தம்முடைய வார்த்தையில் இருந்து. தம்முடைய வார்ததையின் மூலம் அவருடைய சித்தத்தை வெளிய படுத்துகிறார். மனிதருடைய வார்த்தைகளின் மேல் விசுவாசம் வைத்து அமைதியோடு இதற்குக் கீழ்ப்படிந்ததாகப் போய் கூறியிருக்கிறார். இது கேட்பதற்கு மிகவும் நன்றாக இருந்தாலும், அது முற்றிலும் பொய்யாகும். ஏதேன் தோட்டத்தில் தேவனுடைய வார்த்தை மாற்றப்பட்டது போல் இங்கேயும் மாற்றப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில் தேவனுடைய வசனத்தின்படியல்லாமல் கள்ளத் தீர்க்கதரிசனங்களினால் ஜிவிக்கும் சபையாகிய ஸ்திரீயைக் காண்கிறோம், அவள் விக்கிரகாராதனை செய்து, தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல் அதை விட்டுவிட்டபடியால், அவள் அவ்வதிகாரத்தின் முதலாம் வசனத்தில் மகாவேசியென்று அழைக்கப்படுகிறாள். இவள் திரளான தண்ணீர்களின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். இத் தண்னீர்கள். ஜனங்களையும், கூட்டங்களையும், ஜாதிகளையும், பாவைக்காரரையும் குறிக்கும். தேவனுடைய சபை குறைந்த அங்கத்தினர்களைக் கொண்டதாய் இருக்கும். அதை ஒரு சிலரே கண்டுபிடிப்பார்கள். ஆகையால் அநேக ஜனங்களைக் கொண்ட இந்தச் சடை கள்ளச் சபையாக இருக்க வேண்டும்.
இந்த மகா வேசி பார்வைக்கு அழகாகவும், அவளுடைய தத்துவம் கேட்பதற்கு நன்றாகவும் இருப்பினும், தேவனுடைய பார்வையில் வேசித்தனமான மதுவை குடித்து அழகுள்ளவளாக அவள் காணப்படுகிறாள். இவள் அநேக பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் வெறிகொண்டிருந்தாள். பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத தேவனுடைய பிள்ளைகளை அழித்து, தீர்க்கதரிசிகளையும் ஆசாரியர்களையும் கொன்று போட்ட யேசபேலைப் போன்றவள் இவள், கத்தோலிக்க சபை (மகா வேசி) போப்பின அதிகாரத்திற்கு அடங்காத மக்களையும் தேவனுடைய வசனத்தை வாஞ்சித்த மக்களையும் கொடூரமான முறைகளில் கொன்று போட்டது. இது ஆவிக்குரிய பிரகாரம் மரணமடைந்து அதை அறியாதிருந்தது, அதற்குள் ஜீவன் இல்லாமையால், அற்புத அடையாளங்களொன்றும் அதனிடம் காணப்படவில்லை.
மனந்திரும்பத் தவணை

வெளி. 2:27 "அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவனை கொடுத்தேன்: தன வேசி மார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை”.
தியத்தீரா சபை ஆகாபைக் காட்டிலும் பொல்லாங்கானதாக இருந்தது. ஏனெனில் ஆகாபும் கொஞ்சக்காலம் தன்னுடைய பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, தேவனுக்கு முன்பாக மனத் தாழ்மையாய் நடந்து கொன்டான். ரோமன் கத்தோலிக்க சபையோ ஒருபோதும் தனனுடைய பாவங்களுக்காக மனஸ்தாபப் படாமல், அவள் மனந்திரும்ப வேண்டுமென்றெண்ணி அதற்கென்று பிரயாசப்பட்ட எல்லாரையும் கொன்று போட்டது என்று சரித்திரம் கூறுகிறது. தேவன் ஒவ்வொரு காலத்துக்குரிய தூதர்களை எழுப்பி அவர்களுடைய ஊழியத்தில் உதவி செய்வதற்கென சில அருமையான ஊழியக்காரரையும் எழுப்பினார். இவர்களெல்லாம் தங்களால் இயன்றவரை, சபையைத் தேவனிடம் சேர்க்க முயற்சித்தனர். எத்தனையோ முறை தேவனும் சபை மனந்திரும்புவதற்கென்று அதற்குத் தருணமளித்தார். எனினும் அவள் மனந்திரும்பவில்லை. அவள் ஒருபோதும் மனந்திரும்பப் போவதுமில்லை. ஏனெனில் அவள் வெறிகொண்டவளாய் ஆவிக்குரிய காரியங்களில் தன்னுடைய புத்தியை இழந்தாள்.
ரோமன் கத்தோலிக்க சபையானது இப்பொழுது பிராடெஸ்டண்ட் மார்க்கங்களோடு இணைய முயற்சித்து பிராடெஸ்டண்ட் பிரமாணங்களோடு அதனுடைய பிரமாணம் ஒன்றாக இருக்க வேண்டுமென்று தன் பிரமாணங்களை மாற்றிக் கொள்வதனால், பரிசுத்தவான்களைக் கொன்ற செய்கைகளுக்காக அது மனஸ்தாபப் பட்டது என்று நீங்கள் எண்ணவேண்டாம். ஒரு முறையாவது தன்னுடைய மனஸ்தாபத்தைக் குறித்து அந்தச் சபை பகிரங்கமாக அறிக்கை செய்யவில்லை; அவ்வாறு அறிக்கை செய்யப் போவதுமில்லை. இந்தக் காலத்தில் எவ்வளவு அன்பாகவும் அருமையாகவும் அவள் காணப்பட்டபோதிலும், மனந்திரும்பாத அவளுடைய இருதயத்தில் கொலைக்குரிய பொல்லாங்கு மறைந்து கிடப்பதினால், ஒரு நாள் அவள் மறுபடியும் எழும்பி மக்களைக் கொலை செய்வாள்.
வேசிக்கு விரோதமான நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டது
வெளி, 2:22-23 : “இதோ, நான் அவளைக் கட்டில் கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளை விட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன், அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இரு தயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்து கொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்”.
இவள் தன்னுடைய வேசித்தனத்தின் மூலமாய் பிள்ளைகளைப் பெற்றதனால் தேவனுடைய வார்த்தையின்படி அக்கினியினால் சுட்டெரிக்கப்பட வேண்டும். ஆம், உண்மையாகவே அவள் முடிவில் அக்கினிக் கடலில் வெந்து போவாள். அவளுடைய பிள்ளைகளைக் குறித்து சற்று சிந்திப்போம். அவளில் தோன்றி வெளிப்பட்ட பிள்ளைகளும் அவள் செய்த கிரியைகளையே செய்தனர். ஸ்தாபனத்திலிருந்து வெளிவந்து மறுபடியும் அதற்கே திரும்பிச் செல்லாத ஒரு சபையை எனக்குக் காண்பியுங்கள். லூதரன்கள் (Lutherans) ஸ்தாபனத்தை விட்டு வெளியில் வந்து தங்களுக்கென்று ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டனர். இன்றைக்கோ, கத்தோலிக்க பிராடெஸ்டண்டாரின் ஐக்கியத்தை (Ecumenical move) இவர்கள் முழு இருயத்தோடும் ஆதரிக்கின்றனர். அதே போன்று மெதோடிஸ்டுகளும் (Methodists) பெந்தெகொஸ்தேயினரும் (Pentecostals) ஸ்தாபனங்களை விட்டு வெளியில் வந்தாலும், தங்களுக் கென்று ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டு, தாங்கள் பிரிந்து வந்த சபையின் கொள்கைகளைப் பின்பற்றினர். சபையை விட்டு மக்கள் வெளிவரும் காலம் இப்பொழுது ஒன்றுண்டு. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர்கள் சத்தியத்தை அறிவதனால், அவர்கள் ஸ்தாபனங்களின் கொள்கைகளைப் பின்பற்றுவதில்லை. இவர்கள்தான் கடைசி நாட்களின் மணவாட்டி சபையாவர்.
வேசியின் பிள்ளைகளென்று வேதத்தில் கூறப்படுவது, ரோமன் கத்தோலிக்க சபையைப் போன்ற கொள்கைகளையுடைய மற்றைய சபைகளைக் குறிக்கும். யேசபேலுக்கும் ஆகாபுக்கும் ஒரு குமாரத்தி பிறந்தாள். அவள் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் மகனான யோராமை மணந்தாள். அவன் (யோராம்) இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்து, ஆகாபின் வீட்டார் செய்தது போலச் செய்தான்” (2 ராஜா 8:18), இந்தக் கலியாணத்தின் மூலம் யோராம் விக்கிரகாராதனையைப் பின்பற்றியதுமல்லாமல், தேவனுக்குப் பயந்து அவரை வழிபட்டு வந்த யூதாவையும் விக்கிரகாராதனையில் கொண்டு சென்றான். நான் முன்கூறிய வண்ணம், இதைத் தான் வேசியின் பிள்ளைகளாகிய சபைகளெல்லாம் செய்தன. வெளியில் வந்தவுடனே அவர்கள் சத்தியத்தைப் பின்பற்றத் தொடங்கி, பின்னர் கட்டுப்பட்ட ஸ்தாபனங்களுக்குள் மணந்து கொண்டு, மக்களின் பிரமாணங்களையும், கொள்கைகளையும், ஆசாராங்களையும் கைக்கொண்டு தேவனுடைய வசனத்தைப் புறக்கணித்தனர். "தேவ வசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்" (எபி. 13:7). தேவனுடைய வசனம் நம்மை ஆளுகிறதேயன்றி. மக்கள் நம்மை ஆள்வதில்லை. ஒரு மனிதன், கணவனான பின், ஸ்திரீக்குத் தலைவனாக இருந்து, அவளை ஆளுகிறான். சபையும் ஒரு ஸ்திரீயாக கருதப்படுகிறது. அவள் வார்த்தையினால் ஆளப்பட வேண்டும். இயேசுவே அந்த வார்த்தையாம், சபை வார்த்தையைப் புளக்கணித்து மனிதனைத் தலைவனாகக் கொண்டால், அவள் வேசியாகிறாள். எல்லாச் சபைகளும் ஆசாரங்களையும், கொள்கைகளையும் கடைபிடித்து, வசனத்தைப் புறக்கணிக்கின்றன. அவ்வாறு செய்யாத ஒரு சபையின் பெயரைக் கூறுங்கள். ஆகவேதான் தாயைப் போலவே, பிள்ளைகளும் வேசிகளாகக் கருதப்படுகின்றனர்.
வேசிக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் இரண்டு விதமான தண்டனை நியமிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது, அவளைக் கட்டில் கிடையாக்குவேன் என்று இயேசு கூறுகிறார். அந்த வசனத்தின் கடைசி பாகத்தைப் படித்தால், அது "உபத்திரவத்தின் கட்டிடல் என்பது விளங்கும். ஆம், வரப்போகும் உபத்திரவங்களின் காலங்களில் அவள் பங்கு கொள்ள வேண்டும். இயேசுவும் மத். 25:1-13ல் இதைக் குறித்துச் சொல்லுகிறார். பத்து கன்னிகைகள் இருந்தனர். அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர், ஐந்து பேர் புத்தியல்லாதவர், புத்தியுள்ள கன்னிகைகளிடத்தில் எண்ணெய் (பரிசுத்த ஆவி) இருந்தது. புத்தியில்லாத கன்னிகைகளிடத்தில் எண்ணெய் இல்லை. "இதோ மணவாளன் வருகிறார் என்ற சத்தம் உண்டானபோது புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள் எண்ணெய்க் காகத் தேடி ஓடினர். ஆனால் பத்தியுள்ள ஐந்து கன்னிகைகளோ கலியான வீட்டில் பிரவேசித்தனர். புத்தியில்லாத ஐந்து கன்னிகை களும் உபத்திரவத்தில் பங்கு கொள்வதற்கென விடப்பட்டனர். இரகசிய வருகையில் (Rapture) எடுத்துக் கொள்ளப்படாதயாவ ருக்கும் இதுதான் சம்பவிக்கும். வேசியும் அவளுடைய பிள்ளைகளும் உபத்திரவத்தில் பங்கு கொள்ள வேண்டும். இரண்டாவதாக “அவர்களைக் கொல்லவே கொல்வேன்” என்று இயேசு கூறுகிறர் (ஆங்கிலத்தில் 'I will kill them with death" என்று எழுதப்பட்டிருக்கிறது). மக்கள் தூக்கிலிடப்படுவதன் மூலமோ அல்லது வேறு விதமாகவோ கொல்லப்படலாம். ஆனால் மரணமே இவர்கள் மரணத்திற்குக் காரணமாயிருக்கிறது. யேசபேலின் மகள் யோராமை மணந்து : யூதாவின் வீட்டில் புகுந்து, யூதாவை விக்கிரகாராதனைக்கு வழிநடத்தியதின் காரணமாகக் கர்த்தர் யூதாவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார். அவள் அவனைக் கலியாணம் செய்த அந்த மனமே, யூதா ஆவிக்குரிய மரணமடைந்தது. அது போன்று, ரோமாபுரியின் ஆதிச்சபை ஸ்தாபனமுண்டாக்கிக் கொண்ட (Organised) அதே நேரத்தில் ஆவிக்குரிய மரணமடைந்தது. லூதரன்களும் அவ்வாறு செய்த போது, ஆவிக்குரிய மரணம் எய்தினர். கடைசியில் பெந்தெகொஸ்தே சபையும் ஸ்தாபன முண்டாக்கிக் கொண்டபோது, பரிசுத்த ஆவி அவர்களை விட்டுப் போனதை அவர்கள் நம்புவதில்லை. இதன் பிறகு தேவத்துவத்தின் ஒருமையைக் குறித்த உண்மை (Oneness of the Godhead) வெளிப்பட்டது. அவர்களும் தங்களை ஸ்தாபித்துக் கொண்டதால் மரணமடைந்தனர். கடைசியில் 1933ம் வருஷத்தில் ஒஹையோ நதியில் (Ohio River) தேவனுடைய அக்கினி விழுந்த பிறகு மக்களைக் சுகமாக்கும் எழுப்புதல் (Healing Revival) உலகத்தையே அசைத்தது. இந்த எழுப்புதல் எந்த ஸ்தாபனங்களின் மூலமாகவும் உண்டாகவில்லை. கர்த்தர் இனிச் செய்யப் போகும் எல்லாக் கிரியைகளையும் ஸதாபனங்களின் வெளியில்தான் செய்வார். மரித்தோர்களைக் கொண்டு அவர் கிரியை செய்யவே முடியாது. பாபிலோனுக்குப் புறம்பே ஜீவிக்கிற அங்கத்தினர்களின் மூலமாய்த் தான் அவர் கீரியை நடப்பிக்க முடியும்.
இதுவரை ஜீவனால் ஆட்கொள்ளப்பட்ட சபைகள், தங்களை ஸ்தாபித்துக் கொண்டதால் ஜீவனையிழந்து மரணமடைந்தன. நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கை. பிலேயாமின் கொள்கை இவைகளின் விளைவால் உண்டான ஸ்தாபனங்கள் தங்களுடைய கொள்கையை பேசயேல் தீர்க்கதரிசினியின் மூலமாய்ப் போதித்து, ஏவாள் மானிடவர்க்கத்துக்கு மரணத்தை சம்பாதித்துக் கொடுத்தது போல. இவைகளும் மரணத்தையளித்தன. ஏவாளும் சர்ப்பமும் தங்களுடைய பொல்லாத செய்கைகளுக்காக அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆதாமோ இவ்வாறு செய்யாமல், ஏவாளைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டதால் அவள் இரட்சிக்கப்பட்டாள். ஆனால் சாத்தானின் மார்க்கமோ எல்லாக காலங்களையும் கடந்த பிறகு அதை அழிவினின்று இரட்சிக்க யாரும் குறுக்கிடப்போவதில்லை. வேசியும், அவளுடைய பிள்ளைகளும், அந்திக்கிறிஸ்துவும். இவர்களை வஞ்சித்த சாத்தானும் அக்கினிக் கடலில் பங்கடைவார்கள்.
இப்பொழுது நான் கூறப்போகும் செய்தியைக் கடைசிக் காலத்திற்குரிய செய்தியோடு சேர்த்து அளித்திருக்கவேண்டும். ஆனால் இது ஸதாபனங்களைக் குறித்தும் அவைகளுக்கு நேரிடப் போவதையும் குறித்து திட்டவட்டமாக அறிவிப்பதால் அதை இங்கேயே கூறி உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். “பின்பு நான் கடற்கரை மணலில் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வரக் கண்டேன், அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன, அதன் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின் மேல் தூஷணமான நாமங்களும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது. அதின் கால்கள் கரடியின் கால்களைப் போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் இருந்தன வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாக காயப்பட்டிருக்கக் கண்டேன். ஆனால் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, அந்த மிருகத்திற்கு அப்படிபட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள் அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்த பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம் பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமா யிருக்கிறவர்களையும் தூஷித்தது. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம் பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள், காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன். சிறைப்படுத்திக் கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப் போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும். பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக் குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப் போலப் பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதன் குடிகளும் வணங்கும்படி செய்தது. அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின் மேல் அக்கினியை இறங்கப் பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம் போக்கிட, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ண வேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர். சுயாதீனர், அடிமைகள் இவர்கள் யாவரும் தங்கள் வலது கைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும். அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவும் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும். அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு" (வெளி. 13:1-18)
ரோமன் கத்தோலிக்க சபையின் வல்லமையையும், அது ஸ்தாபனங்களின் மூலம் என்ன செய்யும் என்பதையும் மேற்கூறிய அதிகாரம் எடுத்துக் காண்பிக்கிறது. தேவனுடைய நாமத்தை எவ்வளவாக இது உச்சரித்தாலும், அது மாய்மாலமான ஒரு கள்ளச் சபையேயாகும். சாத்தானைத் தலைமையாகக் கொண்டு இந்த சபை நடத்தப்படுகிறது. சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஏறி யிருக்கும் வேசியானவள், ரோமன் கத்தோலிக்க சபையின் ஆதிக்கம் இப்பிரபஞ்சத்தின் சக்தியாகிய சாத்தானால் உண்டாயிற்றென்றும், நம்முடைய தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் உண்டாகவில்லை என்பதையும் நமக்கு வெளிப்படுத்துகிறாள்.
17ம் வசனத்தின் மூலமாக, இந்த வேசி பூலோகத்திலுள்ள வாணிபத்தின் மேல் அதிகாரம் செலுத்தி, அவளுடைய சம்பந்தம் இல்லாமல் யாரும் கொள்ளவும் விற்கவும் கூடாது என்று நாம் அறிகிறோம். வெளி 18:9-17ன் மூலம் இவள் ராஜாக்கள், ராஜகுமாரர், வர்த்தகர் இவர்களோடு சம்பந்தங்கலப்பாள் என்று தெளிவாகிறது. அதாவது ஒரு காலத்தில் ரோமாபுரி சபை வாணியத் துறையில் சம்பந்தப்படும் என்று தெளிவாகிறது.
வெளி 13:11ன் பிரகாரம் மிருகம் தனக்கென்று உண்டாக் கப்பட்ட சொரூபத்தின் மூலம் தன்னுடைய செல்வாக்கைப் பரப்பும். உலகத்திலுள்ள எல்லா ஸ்தாபிக்கப்பட்ட சபைகளும் கத்தோலிக்கரும் ஒன்றுபட்டதன் விளைவால் உண்டாகும் உலக சபை (Ecumenical Council) ஐக்கியத்தையே இந்த சொரூபம் குறிக்கிறது. கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கென்று இந்த ஐக்கியம் உண்டாக்கப்பட்டிருக்க வழியுண்டு. ஆனால் கம்யூனிஸமோ , நோகாத் நேச்சார் ஒரு நோக்கத்திற்கென்று எழுப்பப்பட்டது போல், வேசியின் மார்க்கத்தைச் சுட்டெரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தேவனுடைய சித்தத்தினால் எழுப்ப்பட்டதால், ஒரு நாள் அந்த நோக்கம் நிறைவேறி, ரோமாபுரியானது கம்யூனிஸ்டுகளால் அழிக்கப்படும். எவ்விடங்களில் ரோமசபை ஸ்தாபிக்கப்பட்டதோ, அவ்விடங்களிலெல்லாம் கம்யூனிஸமும் பரவிற்று என்பதை நாம் அறிய வேண்டும். இவ்வாறு நேரவேண்டும் என்று தேவனுடைய திட்டமாயிருக்கிறது. கம்யூனிஸம் மாத்திரம் உங்களுடைய விரோதியென்று நீங்கள் எண்ணவேண்டாம். அதைக் காட்டிலும் பரம விரோதி கத்தோலிக்க சபை என்று நான் உங்களை எச்சரிக்க விரும்புகிறேன்.
வெளி, 13:1-4 படித்து அந்த வசனங்களை வெளி 12:15 வசனங்களோடு ஒப்பிடுவோம். வெளி 13:1-4 "பின்பு நான் கடற்கரை பனவில் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதன் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின் மேல் தூஷனமான நாமங்களும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது அதின் கால்கள் கரடியின் கால்களைப் போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் இருந்தன. வலுசர்பபமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத் தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம் பண்ணத்தக்கவன் யார் என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்". வெளி. 12:1-5 "அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது. ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழ் சந்திரனும், அவள் சிரசின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன, அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவ வேதனையடைந்து, பிள்ளை பெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். அப்பொழுது வேறோரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது: ஏழு தலைகளையும், பத்து கொம்புகளையும், தன் தலை களின் மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்ப மிருந்தது. அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றி லொரு பங்கை இழுத்து அவைகளைப் பூமியில் விழத் தள்ளிற்று; பிரசவ வேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப் போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது. சகல ஜாதிகளையும் இருப்புக் கோலால் ஆளுகை செய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. சர்வாதிகாரம் பொருந்திய அஞ்ஞான ரோம் சாம்ராஜ்யம், முரடர்களால் (barbarians) முறியடிக்கப்பட்டு உலக ஆதிக்கத்தை இழந்தது. ஆனால் இந்த ஆதிக்கத்தைப் போப்பால் ஆளப்பட்ட ரோம ராஜ்யத்தின் மூலம் இது திரும்பவும் பெற்றது. வெளி 13:3ல் சொல்லப்பட்ட மிருகம் சாவுக்கேதுவான காயமடைந்தும் சொஸ்த மாக்கப்பட்டது. ஆம், எல்லாவற்றையும் நசுக்கி உலகத்திலேயே மிகவும் வல்லமையான சாம்ராஜ்யமாக விளங்கிய ரோம சாம் ராஜ்யம் கடைசியில் சாவுக்கேதுவாகக் காயப்பட்டது. அவள் வல்லமை இழந்தவளாய் சைனியங்களால் ஆளப்பட்டாள். ஆனால் கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தில் அவள் புத்துயிர் பெற்றாள். அதன் மூலம் போப்பின் ரோம சாம்ராஜ்யம் இன்று உலகம் முழுவதும் பரவி சர்வாதிகாரம் பெற்று விளங்குகிறது. ராஜாக்கள வாத்தகர்கள் உதவியை இவள் பெற்று, மதபலமும் செல்வபலமும் கொண்டவளாய் இந்தக் காலத்தின் தேவதையாக அவள் அரசாண்டு வருகிறாள். பிள்ளையைப் பட்சித்துப் போடக் காத்துக் கொண்டிருக்கும் வலுசர்ப்பமாக இவளே காட்சியளிக்கிறாள். ஏரோது இயேசு கிறிஸ்துவைக் கொல்ல வகைதேடி, அவனுடைய முயற்சியில் தோல்வியடைந்தான். ஆனால் பின்பு இயேசு ரோமப் போர்ச்சேவகர்களால் சிலுவையில் அறையப்பட்டு இப்பொழுதோ சிங்காசனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டவராயிருக்கிறார்.
மேற்கூறியவைகளோடு, தானியேல் கண்ட தரிசனத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும். தானியேல் கண்ட சொரூபத்தின் கடைசி பாகம், அதாவது கடைசி உலக ஆதிக்கம், இரும்பும் களி மண்ணும் கலந்து உண்டாக்கப்பட்ட பாதங்களில் உள்ளது. இரும்பு ரோம சாம்ராஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் இப்பொழுதோ அது பலமுள்ள இரும்பாயிராமல் களிமண் கலந்ததாயிருக்கிறது இருப்பினும் அது நீடித்து, ஜனநாயக நாடுகளிலும் கொடூர ஆட்சி செலுத்தப்படும் நாடுகளிலும் தன்னுடைய விவகாரத்தை நடத்திக் கொண்டு வருகிறது.
ஐக்கிய நாடுகளின் சபையில் க்ருஷேவும் (Khrushchev) ஐசன் ஹோவரும் (Eisenhower) சந்தித்தார்கள். இச்சபையில் ஐந்து கிழக் கத்திய நாடுகளும் ஐந்து மேற்கத்திய நாடுகளும் அங்கத்தினராயிருந்தன. க்ரூஷேவ் கிழக்கத்திய நாடுகளின் சார்பிலும், ஐசன்ஹோவர் மேற்கத்திய நாடுகளின் சார்பிலும் பேசினர். “குரூஷ்சேவ்” என்ற பதம் ருஷிய மொழியில் களிமண் என்று பொருள்படும். 'ஐசன்ஹோவர்' என்ற வாக்கிற்கு, இரும்பு என்று அர்த்தம். உலகத்தின் இரண்டு முக்கியமான தலைவர்கள், அதாவது இரும்பினாலும் களிமண்ணினாலும் செய்யப்பட்ட பாதங்களின் இரு பெருவிரல்கள். ஒருவருக்கொருவர் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதற்கு இது ஓர் அறிகுறி,
4ம் வசனத்தில் "மிருகத்தோடு யுத்தம் பண்ணத்தக்கவன் யார்" என்ற கேள்வி கேட்கப்படுகிறது. தற்பொழுது அநேக வல்லமையுள்ள நாடுகள் உண்டு, ஆனால் இப்பொழுதோ போப்பின் ரோம ஆதிக்கம் தன்னிஷ்டப்படி அதிகாரம் செலுத்திக் கொண்டு வருகிறது, போகப் போக போப்பின் வல்லமை அதிகரிக்கும். அவரோடு யுத்தம் செய்ய யாருக்கும் முடியாது.
6ம் வசனம் தேவனைத் தூஷிக்கும்படி அது தன் வாயைத் திறந்தது என்று கூறுகிறது. (மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, துரோகிகளாயும், இறுமாப்புள்ளவர் களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்). அது தேவனுடைய நாமத்தைத் தூஷித்து அவருடைய நாமத்தைப் பட்டங்களாக மாற்றிப் போட்டது.
7ம் வசனம்: "மேலும் பரிசுத்தவான்களோடே யுத்தம் பண்ணி அவர்களை ஜெயிக்கும்படி அதிகாரங்கொடுக்கப்பட்டது". கத்தோலிக்க மார்க்கம் ருஷியாவில் செய்த கிரியைகளினால் தேவனுடைய நாமம் அங்கு தூஷிக்கப்பட்டது போல அவருடைய நாமம் தூஷிக் கப்படுவதற்கென, அவருடைய நாமத்தினாலேயே உண்மையான விசுவாசி கொல்லப்படுவான்.
8ம் வசனம். “உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்” ஆடுகள் அதை வணங்காததால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம், தெரிந்து கொள்ளப் பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் வஞ்சிக்கப்படு வார்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மேய்ப்பனின் சத்தத்தைக் கேட்டு அவர் பின் செல்வதால் வஞ்சிக்கப்படுவதில்லை.
மரணத்தின் வித்து (அதாவது ஸ்தாபனங்களின் வித்து) முதலாம் சபையின் காலத்தில் விதைக்கப்பட்டு, கடைசியில் பெரிய மரமாக வளர்ந்து எல்லாப் பொல்லாத பறவைகளும் அந்த மரத்தில் தங்குவதற்கு ஏதுவாயிற்று என்று காண்பிக்க நாங்கள் விழைகிறோம். ஜீவனைக் கொடுப்பதாக இந்தப் பொய் சபை பறை சாற்றினாலும், அது உண்மையில் மரணத்தை அளிக்கிறது. அதன் கனி மரணம். அவளில் பங்குகொள்பவர்கள் மரணமடைவர். மகத்தான இந்த உலகச் சபையின் குழு, உலகப்பிரகாரமாகவும் ஆத்துமப் பிரகாரமாகவும் இரட்சிப்பை அளிப்பதாகக் கூறி, உலகத்தை ஏமாற்றி, ஆயிரக்கணக்கான மக்களை மரணத்துக்குட்படுத்துகிறது, மரணமடைந்த இச்சபை, கடைசியில் அக்கினிக் கடலில் தள்ளப்பட்டு அழிக்கப்படும். இந்தச் சபையில் தங்கியிருப்பதனால் உண்டாகப் போகும் பயங்கரமான முடிவைக் குறித்து மக்கள் அறிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! ''அவளை விட்டு வெளியே வாருங்கள், நீங்கள் ஏன் மரிக்க வேண்டும்?'' கடைசி எச்சரிக்கை
வெளி 2:23 அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்து கொள்ளும்: அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிகரியைகளின்படியே பலனளிப்பேன்''
கர்த்தர் இருதயத்தைப் பார்க்கிறார். அது ஒருபொழுதும் மாறினதில்லை, மாறப்போவதுமில்லை. எல்லாச் சபையின் காலங்களிலும் போல, இந்தச் சபையின் காலத்திலும் இரண்டு குழுக்கள் தோன்றி, இவ்விரண்டும் தேவனோடு நெருங்கி ஜீவித்து அவரிடத்திலிருந்து வெளிப்படுதலை பெற்றதாகவும் கூறிக் கொண்டன. ''அகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது, கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பது... அதற்கு முத்திரையா யிருக்கிறது'' (2 தீமோ 2:19), 'கர்த்தர் உள்ளந்திரியங்களை ஆராய்கிற வராயிருக்கிறார்'', நம்முடைய இருதயத்திலுள்ளவைகளை வெளிப்படுத்தும் கிரியைகளையும் அவர் கண்ணோக்குகிறார். இந்த இருதயத்திலிருந்து நல்லவைகளும் பொல்லாத சிந்தனைகளும் தோன்றுகின்றன. நம்முடைய கிரியைகளைக் கர்த்தர் கவனிக்கும் போது, நம்முடைய நோக்கங்களை அவர் நன்றாக அறிகிறார். நம்முடைய ஒவ்வொரு கிரியையும், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், நம்முடைய ஜீவியத்தின் கணக்கு ஒப்புவிக்கப்படும் போது நியாயத்தீர்ப்புக்கு கொண்டுவரப்படும். கள்ளச்சபைக்கு தேவனுடைய பயம் கொஞ்சமேனுமில்லை:அதற்கென்று அவர்கள் தண்டிக்கப்படுவர். கர்த்தருடைய நாமத்தை உச்சரிக்கிறவர்களெல்லாம் பரிசுத்தவான்களாகத் தங்கள் நடக்கையில் காணப்படட்டும். நாம் மனிதரை ஒருவேளை ஏமாற்றலாம். ஆனால் வேதனையோ ஏமாற்ற முடியாது.